சரித்திரம் படப்பிடிப்பில் ராஜ்கிரண் படுகாயம்

ராஜ்கிரண் நடிக்கும் சரித்திரம் என்ற படத்தை மிருகம் பட புகழ் சாமி இயக்கி வருகிறார். எஸ்.என்.ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தில் ராஜ்கிரணுடன் ஆதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதில் சிலம்பாட்ட குருவாக ராஜ்கிரண் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி அருகில் உள்ள காகா கொத்தி பாறை என்ற இடத்தில் நேற்று நடந்தது. சிலம்பத்தை சுழற்றியபடி ராஜ்கிரண் குதிப்பது போன்ற காட்சியை படமாக்கியபோது, எதிர்பாராதவிதமாக அவர் கால் இடறி கீழே உள்ள பாறையில் விழுந்தார். அவருடைய வலது காலில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அந்த இடத்துக்கு ஒரு டாக்டர் வரவழைக்கப்பட்டு, ராஜ்கிரண் காலில் கட்டுப்போடப்பட்டது. இருந்தாலும் அவர் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார்.
Comments


Click it and Unblock the Notifications