ஷாமுக்கு சுளுக்கு-ஷூட்டிங் ரத்து!

நடிகர் ஷாம் இப்போது, 'அகம் புறம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை திருமலை டைரக்டு செய்கிறார். படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சி சென்னை எண்ணூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் படமாக்கப்பட்டது.
அப்போது 85 கிலோ எடை உள்ள ஒரு ஸ்டண்ட் நடிகரை ஷாம் தலைக்கு மேல் தூக்கி வீசுவது போல் ஒரு காட்சியை படமாக்கினார்கள். அந்த ஸ்டண்ட் நடிகரை ஷாம் தூக்கியபோது, அவருடைய முதுகுக்கு கீழ் பகுதியில் சுளுக்கிக் கொண்டது.
தாங்க முடியாத வலியால், அந்த சண்டை காட்சியில் அவரால் நடிக்க இயலவில்லை. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு, 'எக்ஸ்ரே' எடுக்கப்பட்டது. பின்னர் அவர் இடுப்பை சுற்றி 'பெல்ட்' போடப்பட்டது.
குறைந்தபட்சம் ஒரு வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறினார்கள்.
Comments


Click it and Unblock the Notifications