படப்பிடிப்பில் கார் மோதி எஸ்.ஜே.சூர்யா படுகாயம்

நடிகர்- இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நியூட்டனின் 3ம் விதி என்கிற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை தாய் முத்துச் செல்வன் என்பவர் இயக்குகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளில் நடந்து வருகிறது.
நேற்று பள்ளிக்கரணை சாலையில்,கார் துரத்தல் காட்சி ஒன்றை படமாக்கினர். இதில் எஸ்.ஜே. சூர்யா ஒரு பைக்கில் போவது போலவும், அவரை வில்லன்கள் துரத்துவது போலவும் படமாக்கினார் தாய் முத்துச்செல்வன்.
அப்போது திடீரென ஒரு கார் சூர்யாவின் பைக் மீது மோதியது. இதில் சூர்யா தூக்கி வீசப்பட்டார். அவருடைய முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. கை, கால்களிலும் சிராய்ப்புகள் ஏற்பட்டன.
உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், பெரிய அளவில் காயம் ஏதுமில்லை என்று தெரிவித்தனர். எலும்பு முறிவு ஏதும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
ஒரு வாரத்திற்கு சூர்யா ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











