'அரவான்' படத்துக்கு பூஜை!

ஆதி மற்றும் பசுபதியின் வித்தியாசமான நடிப்பில் உருவாகும் அரவான் படத்துக்கு இன்று பூஜை போடப்படுகிறது.
வெயில் அதைத் தொடர்ந்து அங்காடித் தெரு என இரு வித்தியாசமான படைப்புகளைக் கொடுத்த வசந்தபாலன் இயக்கும் 3வது படம் அரவான்.
நாயகனாக ஆதி நடிக்கிறார். முக்கியப் பாத்திரத்தில் பசுபதி வித்தியாசமான கெட்டப்பி்ல் வருகிறார். வெயில் படத்தின் மூலம் பசுபதியின் நடிப்புத் திறமையை
வெளிக்கொணர்ந்தவர் வசந்தபாலன். எனவே அரவானில் பசுபதியின் நடிப்பு இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாயகிகளாக தன்ஷிகா, அர்ச்சனா கவி ஆகியோர் நடிக்கவுள்ளனர். இவர்களில் அர்ச்சனா கவி புதுமுகம். தன்ஷிகா தனது முதல் படத்திலேயே கவர்ந்தவர். மாஞ்சா வேலுவில் அருண்குமாருடன் இணைந்து நடித்தவர்.
இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. இதற்கான பூஜையில் இயக்குநர் ஷங்கர், நடிகர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











