ஏசி மெஷினிலிருந்து கேஸ் கசிவு - விஜய் நடிக்கும் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த அசின்!

By Sudha

Asin
விஜய் நடிக்கும் படப்பிடிப்பில் அசின் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏர்கண்டிஷன் கேஸ் கசிந்ததால் அசினுக்கு இந்த மயக்கம் ஏற்பட்டது.

மலையாளப் படமான பாடிகார்டை ரீமேக் செய்கிறார் விஜய். இது விஜய் நடிக்கும் 51வது படமாகும். இந்தப் படத்துக்கு முதலில் காவல்காரன் என்று பெயர் சூட்டினார்கள். இப்போது அது தற்காலிக தலைப்புதான் என்றும் பொருத்தமான ஒரு தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். ராஜ்கிரண், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் வடிவேலுவும் நடிக்கிறார்.

பிரபல மலையாள இயக்குநர் சித்திக், இந்த படத்தை இயக்குகிறார். திருவிடைமருதூரில் துவங்கிய படப்பிடிப்பு, காரைக்குடி மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

நேற்று காலை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், நடிகை அசின் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த கேரவனில் அமர்ந்து மேக்கப் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, கேரவனில் பொருத்தப்பட்டிருந்த ஏர்கண்டிஷன் மெஷினில் இருந்து கேஸ் கசிந்தது.

இதனால் அசினுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு போனார்கள். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தபிறகுதான் அசினுக்கு மயக்கம் தெளிந்தது.

அசின் மயங்கி விழுந்ததால், படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அசின் நலமாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்த பிறகே படப்பிடிப்பு தொடர்ந்தது. அசின் சம்பந்தப்படாத காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டன. இப்போது காரைக்குடி மலர் லாட்ஜில் ஓய்விலிருக்கிறார் அசின்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X