லாரன்ஸ் 'ரவுசு'- அப்செட்டில் ராசு!

By Staff

Lawrance and Mumtaj
இயக்குநர், நடிகர், டான்ஸ் மாஸ்டர் ராகவ லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் பாண்டி படம், அவரது தேவையில்லாத தலையீடுகளால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு விட்டதாம்.

டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி பின்னர் நடிகராகி அப்புறம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தவர் லாரன்ஸ். இப்போது பாண்டி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் லாரன்ஸ். அவருக்கு ஜோடியாக ஸ்னேகா நடிக்கிறார். ராசு மதுரவன் படத்தின் இயக்குநர்.

படத்தை ராசு மதுரவன் இயக்கிய விதம் லாரன்ஸுக்கு திருப்தி தரவில்லையாம். இதனால் அப்செட் ஆன லாரன்ஸ், சில காட்சிகளை மாற்றுமாறு கூறியுள்ளார்.

குறிப்பாக ஸ்னேகா சம்பந்தப்பட்ட காட்சிகளை அப்படியே மாற்றி விட்டு, வேறு மாதிரி எடுக்கும்படியும் கூறியுள்ளார் லாரன்ஸ். மேலும் பாடல் காட்சிகளை சரிவர எடுக்கவில்லையே என்றும் ராசு மதுரவனிடம் கோப்பட்டுக் கொண்டாராம் லாரன்ஸ்.

இதனால் அப்செட் ஆகி விட்டார் ராசு மதுரவன். லாரன்ஸ் கூறியபடி மீண்டும் ரீஷூட் செய்ய அவருக்கு விருப்பவில்லை. எனவே லாரன்ஸ் கூறிய மாற்றங்களை செய்ய அவர் மறுத்து விட்டார்.

இதனால் கடுப்பான லாரன்ஸ், தயாரிப்பாளரை அணுகி, இயக்குநரை மாற்றி விடுமாறும், மீதம் உள்ள காட்சிகளை தானே இயக்கிக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அதை ஏற்க தயாரிப்பாளர் மறுத்து விட்டார். அத்தோடு நில்லாமல், லாரன்ஸ் மீது தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுத்து விட்டார்.

இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. எப்போது மீண்டும் தொடங்கும் என்று தெரியவில்லை.

லாரன்ஸ், ராசு மதுரவனுக்கு இடையே பஞ்சாயத்து பேசி வருகிறதாம் தயாரிப்பாளர் சங்கம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X