twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஃபேண்டம் கேமராவில் படமாகும் 'எதிர்மறை'!

    By Staff
    |

    Ethirmarai movie still
    ஃபேண்டம் (Phantom) மற்றும் ரெட்-ஒன் கேமிராக்கள் மூலம் படமாக்கப்படும் டிஜிட்டல் திரைப்படம் எதிர்மறை.

    சமீப காலமாக திரையுலகில் எல்லோரும் ரெட் கேமரா பற்றியே அதிகம் பேசி வருகிறார்கள். காரணம் அத்தனை சிறப்புக்களை உள்ளடக்கியது ரெட்-ஒன்.

    இப்போது ஃபேண்டம் எனும் காமிரா மூலமும் படமாக்குகிறார்கள்.

    இந்தக கேமராவின் சிறப்பே, காட்சிகளை அதிகபட்ச வேகத்தில் படமாக்குவதுதான். அதாவது வினாடிக்கு 1000 பிரேம்கள் வரை இந்தக் காமிராவில் படமாக்கமுடியும். குறைந்த ரெசல்யூஷன் வைத்தால் 10000 காட்சிகளைக் கூட ஒரு வினாடிக்குள் பதிவு செய்விடலாம்.

    இந்தக் கேமராவைக் கொண்டும் எதிர்மறை படத்தை எடுத்து வருகிறார்கள்.

    இந்தப் படம் உளவியல் சார்ந்த ஒரு த்ரில்லர் கதை. ஒரு சி.பி.ஐ. அதிகாரியின் சொந்த வாழ்க்கைக்கும், அவர் விசாரிக்கும் தொடர் கொலை வழக்குக்கும் உள்ள தொடர்பை வைத்து கதை பின்னப்பட்டுள்ளது.

    வித்தியாசமான கதைக் களம், திரைக்கதை அம்சத்துடனும் உருவாகும் இந்தப் படம் நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மெய்லிர்க்க வைக்கும் அனுபவத்தைத் தரும் என்கிறார் படத்தின் இயக்குநர் ஜி அருண்.

    இவர்தான் இந்தப படத்தின் தயாரிப்பாளரும்.

    முருகன் மோகன் என்பவர் இசைக்கு வைரமுத்து முழுப் பாடல்களையும் எழுதிக் கொடுத்துள்ளார்.

    புதுமுகங்கள் அஜய்குமார், ராகேஷ், பானுஸ்ரீ, ஷிரீனா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். அலெக்ஸ், முரளி, ராமநாதன் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். மும்பையை சேர்ந்த பாலே நடன கலைஞர் சுகந்தா, ஒரு நடனம் ஆடியிருக்கிறார்.

    மக்கள் தொடர்பு ஈவெரா மோகன் ([email protected]).

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X