இன்று முதல் குலசேகரனும் கூலிப்படையும்

எஸ்.என்.எஸ். மூவிஸ் சார்பில் உஷா வெங்கட்ரமணி, கெளசல்யா மணி தயாரிக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் இந்தப் புதிய படத்தில் கீர்த்தி சாவ்லா, உதயதாரா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜி.சிவா. ராஜசேகர் ஒளிப்பதிவு, தோட்டாதரணி கலை, விடி விஜயன் எடிட்டிங், சண்டைக்கு சூப்பர் சுப்பராயன் ஆகியோர் இடம் பெறுகின்றனர்.
படத்தில் ராஜ்கபூர், தியாகு, ஆனந்த் உள்ளிட்டோரும் இடம் பெறுகின்றனர்.
புழுகுமூட்டை பொன்னம்பலம் என்ற கேரக்டரில் வித்தியாசமான கெட்டப்பில் வைகைப் புயல் வடிவேலு வருகிறார்.
வித்தியாசமான கதைக் களத்துடன் காமெடி கலந்து இப்படத்தைக் கொடுக்கவிருக்கிறார்களாம்.
இப்படத்தின் பூஜையும், பாடல் ஒலிப்பதிவும் இன்று பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது.
திரையுலகப் பிரமுகர்கள் பெரும் திரளாக இதில் கலந்து கொண்டனர்.
More from Filmibeat
குலசேகரனும் கூலிப்படையும் பட பூஜை வடிவேலு பிரகாஷ் ராஜ் உதயதாரா கீர்த்தி சாவ்லா kulasekaranum koolipadaym movie pooja vadivelu prakash raj uthayathara keerthi chawla


Click it and Unblock the Notifications











