மதுரை டூ தேனி... சுகமான பயணம்!

By Staff
Madurai to Theni

விமல் மீடியா பிக்சர்ஸ் மற்றும் எஸ்.பி,எஸ். மீடியா ஒர்க்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வரும் புதிய படம் 'மதுரை டூ தேனி'. இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ரதிபாலா.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அரவிந்த் வினோத் கதாநாயகனாக நடிக்கிறார். 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்ற ஸ்ரித்திகா கதாநாயகியாக நடிக்கிறார்.

வர்களுடன் குமரிமுத்து, சிங்கமுத்து, சிவா, முத்துக்காளை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்கிறார்கள்.

படத்தின் கதை சுவாரஸ்யமானது...

"பொதுவாக பேருந்தில் பயணம் செய்யும் பெரும்பாலானவர்கள் ஜன்னலுக்கு வெளியே உள்ள அழகுகளை ரசித்த வண்ணம் பயணம் செய்வார்கள். அந்த சுகத்தை இந்தப் படம் பார்க்கும்போதும் உணரலாம். மதுரையைக் களமாகக் கொண்டு படமாக்கியிருக்கிறோம். ஒரு சுகமான பயணம்தான் இந்தப் படம்", என்றார் மதுரைக்கார இயக்குநர் ரதிபாலா.

இவர் மட்டுமல்ல, தயாரிப்பாளர்கள் விமல், ஜானகி சோனைமுத்தும் கூட மதுரைக்காரர்கள்தான்.

இசை -ஜேவி. பாடல்கள் -தமிழ்செல்வன், ஓரி ஆனந்தன். ஒளிப்பதிவு -எஸ்.பி.எஸ்.குகன். நடனம் -தீனா. தயாரிப்பு -விமல், எஸ்.ஜானகி சோனைமுத்து.

படம் குறித்த இன்னொரு முக்கியமான செய்தி, இதன் பெரும்பாலான ஏரியாக்கள் நல்லபடியாக விற்கப்பட்டிருப்பதுதான். 'சரக்கு நன்றாக இருந்தால் சின்னப்படமாவது, பெரியபடமாவது...' என்கிறார்கள் படத்தின் பாடல்காட்சி பார்த்தவர்கள்.

இந்தப் படம் மூலம் பிஆர்ஓவாக அறிமுகமாகிறார் சக்திவேல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X