படப்பிடிப்பல் பூனம்-நிஷா மோதல்; சமாதானம் செய்த ஜீவா!

By Staff

'கச்சேரி ஆரம்பம்' படப்பிடிப்பில் நடந்த போட்டி நடனமே மோதலாக மாறியதால் நடிகைகள் பூனம் பாஜ்வாவுக்கு்ம் நிஷா கோத்தாரிக்கும் கடும் சண்டை மூண்டது. இதையும் படத்தின் ஹீரோ ஜீவாதான் தீர்த்து வைத்தாராம்.

தெனாவட்டு படத்தில் ஜீவாவின் ஜோடியாக அறிமுகமாகி, இன்னும் ஜீவாவுடனே ஒட்டிக் கொண்டிருப்பவர் பூனம் பாஜ்வா. இருவரும் அடுத்தடுத்த படங்களில் ஜோடி சேர்ந்து வருகின்றனர்.

அந்தப் படங்களில் ஒன்றுதான் கச்சேரி ஆரம்பம். இந்தப் படத்தில் இன்னொரு நாயகியும் உண்டு. அவர் நிஷா கோத்தாரி. ஜேஜேயில் அமோகாவாக வந்தாரே... அவர்தான்.

படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் பூனம் பாஜ்வாவும் நிஷாவும் ஜீவாவுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போடுவது போல காட்சியாம்.

அந்தப் படாட்டு இப்படித் தொடங்குகிறது... "வாடா வாடா பையா...என் வாசல் வந்து போயா...என் வாசல் தாண்டி வந்து வாசம் வாங்கிப் போயா..."

இதற்காக, ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் ரூ.1 கோடி செலவில் பிரமாண்டமான செட்டெல்லாம் போட்டிருக்கிறார்கள்.

வஞ்சிக்கோட்டை வாலிபன் பட பாடல் ரேஞ்சுக்கு இந்தப் பாட்டை எடுக்கத்திட்டமிட்டதால் இவ்வளவு செலவு செய்திருந்தார்களாம்.

பாடலில் பூனம் பாஜ்வாவும், நிஷா கோத்தாரியும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆடினார்களாம். இந்த போட்டியே பின்னர் வாய்ச் சண்டையாக மாறி, ஒருவரையொருவர் வடிவேலு- கோவை சரளா பாணியில் திட்டிக் கொண்டார்களாம்.

ஒரு கட்டத்தில் இருவரும் கைகலப்பில் இறங்குகிற சூழ்நிலை ஏற்பட்டதால், உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

நடிகர் ஜீவாவும், டைரக்டர் திரைவண்ணனும் குறுக்கிட்டு, இருவருக்கும் இடையே சமரசம் செய்தார்கள். ஒரு மணி நேரத்துக்கு பிறகு படப்பிடிப்பு துவங்கியதாம்.

பின்னர், "வாடா வாடா பையா என் வாசல் வந்து போய்யா" என குத்தாட்டத்தைத் தொடர்ந்தார்களாம் மூவரும்.

முக்கியமான சமாச்சாரம்... மேற்படி சம்பவத்தை யாரும் பார்க்கவில்லை. படத்தின் பிஆர்ஓ கொடுத்தது. நம்பகத்தன்மையை நீங்களே முடிவு செய்து கொள்ளவும்!.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X