பூர்ணா-நந்தாவின் 'வேலூர் மாவட்டம்'!

ஈரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு நந்தா ஒப்பந்தமாகியுள்ள புதிய படம் இது.
கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கும் வேலூர் மாவட்டம், முழுக்க முழுக்க வேலூர் மற்றும் அதன் சுற்றுப் புறப்பகுதிகளில் படமாக்கப்படுகிறது.
மாசிலாமணி படத்தை இயக்கிய மனோகர்தான் இந்தப் படத்தின் இயக்குநர்.
படம் குறித்து மனோகர் கூறுகையில், "தமிழ் சினிமாவில் வேலூர் மாவட்டம் முழுக்க முழுக்க புறக்கணிக்கப்பட்டதாகவே இருக்கிறது. இத்தனைக்கும் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் வருவாய் கொட்டும் மாவட்டம் இந்த வேலூர்தான்.
இந்தப் பகுதியில் உள்ள எத்தனையோ கலாச்சார நிகழ்வுகள் பதிவு செய்யப்படுவதில்லை. மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் வேலூர் மாவட்ட மக்களின் லைப் ஸ்டைல் மிக மிக எளிமையானது.
மதுரை மற்றும் திருநெல்வேலிக் கதைகளையே பார்த்து வரும் தமிழ் ரசிகர்களுக்கு, இந்த வேலூர் மாவட்ட விருந்து நிச்சயம் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும்" என்றார்.
கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் கந்தகோட்டை வெளியீட்டுக்குப் பின் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











