மயங்கி விழுந்த சிந்து மேனன்!

உடனடியாக அவரை ஹைதராபாத் மருத்துவமனையில் சேர்த்தனர்.
தமிழில் ஈரம் படத்தில் நடித்த சிந்து மேனன், இப்போது சுபத்ரா என்ற தெலுங்குப் படத்தில் நடித்துவருகிறார்.
தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்று வந்த அவர் நேற்று முன்தினம் திடீரென மயங்கிவிழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பரிசோதித்த போது, ஓய்வில்லாமை காரணமாக ஏற்பட்ட மயக்கம் இது என தெரியவந்தது.
எனவே தொடர்ந்து ஒரு வாரம் ஓய்வெடுக்கும்படி கூறிவிட்டார்களாம் டாக்டர்கள்.
இதுகுறித்து பின்னர் நிருபர்களிடம் பேசிய சிந்து, "என்ன ஆனதென்றே தெரியவில்லை... திடீரென்று எனக்கு நினைவில்லாமல் போய்விட்டது. இப்போது பரவாயில்லை" என்றார்.
தமிழில் ஈரம் படத்துக்குப் பிறகு புதிய படங்கள் எதையும் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லையாம் சிந்து.
Comments


Click it and Unblock the Notifications