தெலுங்கு படத்துக்கு க்ளாப் அடித்த ரஜினி!

By Staff

Rajini
எந்திரன் படத்துக்காக ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி, ஒரு தெலுங்குப் படத்தை க்ளாப் அடித்து துவக்கி வைத்தார்.

'சைத்ரம் - த சீஸன் ஆப் லவ்' எனும் அந்த தெலுங்குப் படத்தை ராஜு உபதி இயக்குகிறார். விஜய் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் சூர்யா எனும் புதிய ஹீரோ அறிமுகமாகிறார்.

ரஜினியுடன் இந்த விழாவுக்கு வந்த இயக்குநர் ஷங்கர், படத்தின் முதல் காட்சியை இயக்கினார்.

இந்தப் படத்தின் இயக்குநர் ராஜு ஏற்கெனவே இரு படங்களை இயக்கியுள்ளார். இந்த விழா குறித்து நிருபர்களிடம் தயாரிப்பாளர் விஜய் கூறியதாவது:

"சூப்பர் ஸ்டார் ரஜினி வந்ததால் பிரமாண்ட படத்துக்கு இணையான பெருமையைப் பெற்றுள்ளது. அவர் தமிழுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. தென்னிந்திய சினிமாவுக்கே அவரால் பெருமை", என்றார்.

ஒரே அரங்கில் ரஜினி, கமல் மோகன்லால்!

இதற்கிடையே, ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி இப்போது சூப்பர் ஸ்டார்கள் மையம் கொண்டுள்ள இடமாகிவிட்டது.

எந்திரன் படத்துக்காக ஒரு பக்கம் ரஜினி, உன்னைப் போல் ஒருவன் படத்துக்காக மறுபக்கம் கமல், மோகன் லால் என உச்ச நட்சத்திரங்கள் குவிந்திருப்பதால், அவர்களைக் காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளார்களாம். ரஜினி, கமல், மோகன்லால் மூவருக்குமே ஹைதராபாதில் பெரும் ரசிகர் கூட்டம் இருப்பதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் செக்யூரிட்டிகள் திணறுகிறார்களாம்.

ரசிகர்கள் தவிர, திரையுலக, அரசியல் பிரபலங்கள் பலரும் ரஜினியைக் காண வந்தவண்ணம் உள்ளார்களாம்.

ஆனால் இதை ஒரு சலிப்புக்குரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல், நல்ல சகுனமாகப் பார்க்கிறார்கள் ஸ்டுடியோ நிர்வாகத்தினர்.

"இது நிச்சயம் சந்தோஷமான விஷயமே. கலைஞர்கள் மொழிகளைத் தாண்டியவர்கள் என்பது ஒருபுறமிருக்க, மக்களின் இந்த ஆர்வம்தான் சினிமா தொழிலை நீண்ட நாளைக்கு வாழ வைக்கும். மக்கள் வருவதை நாங்கள் தடுக்கவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டும் பலப்படுத்தி வைத்துள்ளோம். மக்களை விரட்டிவிட்டு வெறும் கொட்டகையிலா படம் ஓட்டுவார்கள்", என்றார் ஸ்டுடியோ நிர்வாகி ஒருவர்.

வாஸ்தவமான பேச்சு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X