அஜய், அக்ஷய் சண்டை-காரைக்குடியில் 'ஜிம்'!

By Staff

Priyadarshan with Sameera Reddy
அஜய் தேவ்கன், அக்ஷய் கண்ணா ஆகியோரை வைத்து பீகார் ஜாதிக் கலவர பின்னணியில் பிரியதர்ஷன் எடுத்து வரும் படத்துக்காக காரைக்குடியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அஜய் தேவ்கன், அக்ஷயி கண்ணா தவிர பிபாஷா பாசவும் படத்தி்ல இருக்கிறார். பீகார் கிராமம் ஒன்றில் நடந்த ஜாதிக் கலவரம் மற்றும் கெளரவக் கொலைகள் குறித்த கதையைத்தான் பிரியதர்ஷன் படமாக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் தத்ரூபமான ஒரு சண்டைக் காட்சி இடம் பெறுகிறது. அதில் தேவ்கனும், கண்ணாவும் நடிக்கவுள்ளனர். காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக இருவருக்கும் விசேஷ பயிற்சி கொடுத்து வருகிறார் பிரியதர்ஷன்.

உடம்பை முறுக்கேற்றுவதற்காக தற்காலிகமாக ஒரு ஜிம்மையே ஏற்படுத்தியுள்ளார். காரைக்குடி அருகே ஒரு கிராமத்தில் இந்த ஜிம் போடப்பட்டுள்ளது.

இங்குதான் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதுகுறித்து பிரியதர்ஷன் கூறுகையில், படத்தில் நிஜமான ஒரு ஜாதிச் சண்டை இடம் பெறுகிறது. இந்த சண்டை உண்மையில் நடந்தது. அதை அப்படியே திரையில் காட்டப் போகிறோம். காட்சி இயல்பாக வர வேண்டும் என நான் கருதுகிறேன். ரசிகர்கள் அப்படியே மிரண்டு போய் விடும் அளவுக்கு அது தத்ரூபமாக இருக்கும்.

படப்பிடிப்பு தற்போது காரைக்குடி பக்கம் நடந்து வருகிறது. அஜய் தேவ்கனும், கண்ணாவும் சண்டைக் காட்சிக்காக தயாராகி வருகிறார்கள். இந்தி திரையுலகில் இப்படி ஒரு சண்டைக் காட்சியே வந்ததில்லை என்று கூறும் அளவுக்கு அது மிக அருமையாக உருவாகிறது என்றார்.

சண்டைக் காட்சிகளை தியாகராஜன் மற்றும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிரான்சிஸ் ஆகியோர் கவனிக்கவுள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X