பாலாவின் அடுத்த படம் அகங்காரன்?

By Shankar

Bala
பாலா தனது அடுத்த படத்துக்கு அகங்காரன் எனப் பெயர் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர் பாலா. இவரது படங்களுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் என்றால் மிகையல்ல.

இப்போது அவன் இவன் என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலா. பொதுவாக தனது படங்களை முடிக்க ஆண்டுக்கணக்கில் அவகாசம் எடுத்துக் கொள்வார் பாலா. ஆனால் இந்த அவன் இவனை ஒரே ஆண்டுக்குள் முடித்துள்ளார்.

விஷால் - ஆர்யா நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இப்போதே பாலாவின் அடுத்த படங்கள் குறித்த செய்திகள் வரத் துவங்கியுள்ளன. இந்தப் படத்துக்கு அகங்காரன் என்ற தலைப்பைப் பதிவு செய்து வைத்துள்ளாராம் பாலா.

இந்தத் தலைப்பை அவர் நான் கடவுள் படம் எடுக்கும்போதே பதிவு செய்துவிட்டதாகவும், அவன் இவனுக்குப் பிறகு எடுக்க விருக்கும் படத்துக்கு இந்தத் தலைப்பைப் பயன்படுத்துவார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் வழக்கம் போல பாலா தரப்பு ஆழ்ந்த அமைதியில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X