twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காலில் காயத்தோடு பெண் சிங்கம் படத்துக்கு நடனமாடிய லட்சுமி ராய்!

    By Staff
    |

    Lakshmi Rai
    எடுத்த செயலை முடிக்க எந்த வலியையும் தாங்குவோர் வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் பெல்காம் அழகி லட்சுமி ராய்!

    ஒரு படத்தின் பாடல் காட்சி குறித்த காலத்துக்குள் சிறப்பாக முடிய வேண்டுமே என்ற வேகத்தில், தனது வலது கால் பெருவிரல் முறிவைக் கூடப் பொருட்படுத்தாமல் ஆடிக் கொண்டிருக்கிறார் என்றால் சாதாரண விஷயமா என்ன?

    அந்தப் படம் முதல்வர் கலைஞர் கதை வசனம் எழுதும் பெண் சிங்கம்...

    லாரன்ஸுடன் ஒரு அட்டகாசமான குத்துப் பாடல் காட்சியில் நடனமாடிக் கொண்டிருந்தார் லட்சுமிராய்.

    அடி
    ஆடி அசையும் இடுப்பு - சோறு
    ஆக்கி வைக்கும் அடுப்பு
    அட
    ஏன்டி அதுக்கு உடுப்பு- அதை
    எடுக்கச் சொல்லும் விடுப்பு
    இப்ப
    சுடலாமா? சுடக்
    கூடாதா? ஒரு
    சப்பாத்தி சூடா

    கையி
    படலாமா? படக்
    கூடாதா? சொல்லு
    படுத்தாதே பாடா?

    என்று ஆரம்பிக்கும் பாடல்.... வாலிபக் கவிஞர் வாலி எழுதியது.

    இந்த வரிகளைக் கேட்ட கலைஞர், 'மனுசனுக்கு இன்னும் அந்த குசும்பு போகலைய்யா...' என்று சிரித்தபடி கமெண்ட் அடித்தாராம்.

    இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்து லட்சுமி ராயுடன் ஆட்டம் போடுபவர் ராகவா லாரன்ஸ்.

    பூந்தமல்லியை அடுத்துள்ள திருமழிசை கூடப்பாக்கத்தில் இந்தப் பாடல் காட்சியை செட் போட்டு எடுத்து வருகின்றனர். நான்கு நாட்களில் முடிக்கத் திட்டமிட்டனர். எனவே பம்பரமாய் ஆட்டம் போட்டு வந்தார் லட்சுமி ராய்.

    ஒரு நடன அசைவுக்காக சற்று உயரத்திலிருந்து குதித்துள்ளார் லட்சுமி ராய். அப்போது மளுக்கென்று ஒரு சத்தம். அடுத்த நிமிடம் வலது கால் பெருவிரலை அசைக்க முடியாத அளவு வலி. உடனடியாக வலி நிவாரண சிகிச்சை எடுத்துக் கொண்டு சில மணி நேரங்கள் ஓய்விலிருந்த லட்சுமி ராய், அதற்கு மேல் உட்காரப் பிடிக்காமல் செட்டுக்குள் வந்து நடனத்தில் பங்கேற்றாராம்.

    உதய்கிரண்-மீரா ஜாஸ்மின் இணையுடன், ரம்பா, ஜேகே ரித்தீஷ் என ஏராளமான கலைஞர்கள் பங்கேற்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க வணிகரீதியான ஆக்ஷன் படம் என்கிறார் இயக்குநர் பாலி ஸ்ரீரங்கம். பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவருக்கு முதல் படமே முதல்வர் கதை வசனத்தில் அமைந்துள்ளது. இசை தேவா.

    முதல்வரும் ஒரு பாடலை எழுதியுள்ளார் இந்தப் படத்தில். அந்தப் பாடலை வெளிநாடுகளில் படாக்குகிறார்கள். வைரமுத்துவும் ஒரு பாடல் எழுதியுள்ளார்.

    உளியின் ஓசை படத்தைத் தயாரித்த நந்தினி ஆர்ட்ஸ் ஜெயமுருகன், ஆறுமுகனேரி எஸ்.முருகேசன் தயாரிக்கும் இந்தப் படம் ஏப்ரலில் வெளியாகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X