சைஃப்-கரீனா 'கிஸ் கிஸ்'!

சைஃப் அலிகானும், கரீனா கபூரும் காதலர்கள் என்பது பழைய விஷயம். இருவரும் முதல் முறையாக ஒரு புதிய படத்தில் உதட்டோடு உதடு பதித்து முத்தமிட்டுக் கொண்டுள்ளனர் என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி.
தர்மா புரடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக ரென்சில் டி சில்வா இயக்கும் புதிய படத்தில்தான் இந்த முத்தக் காட்சி இடம் பெறுகிறதாம்.
கடந்த வாரம் இந்த முத்தக் காட்சியை மும்பையின் செம்பூரில் உள்ள ஸ்டுடியோவில் படமாக்கியுள்ளார் ரென்சில் டிசில்வா.
ஒரு பாடல் காட்சியில் இந்த முத்தம் இடம் பெறுகிறதாம். அந்த இடத்தில் முத்தம் அவசியம் என்று சைஃப் மற்றும் கரீனாவிடம் இயக்குநர் கூற, சரியென்று இருவரும் தலையாட்டினராம்.
சைஃப் அலிகானுடன் முத்தக் காட்சியில் நடிப்பது கரீனாவுக்கு இதுவே முதல் முறை. ஆனால் நாயகர்களுடன் முத்தமிட்டுக் கொள்வது போல நடிப்பது அவருக்கு ரொம்பப் பழசு.
சைஃப் அலியுடனான இந்த முத்தக் காட்சியில் நடிப்பது குறித்து சைஃபுடன் நீண்ட ஆலோசனை நடத்தினாராம் கரீனா. எந்த ஆங்கிளில் முத்தமிட்டால் நலமாக இருக்கும் என்பது உள்பட தீவிரமாக ஆலோசனை நடத்திய பின்னரே ஷாட்டுக்குப் போனாராம்.
காட்சிக்கு ஒரே ஒரு முத்தம்தான் தேவைப்பட்டது. இருப்பினும் ஐந்து டேக்குகள் ஆகி விட்டதாம் கரீனா, சைஃப் முத்தத்தை ஓ.கே. செய்ய.


Click it and Unblock the Notifications











