படப்பிடிப்பில் நயனதாரா திடீர் மயக்கம்-'ரெஸ்ட்' எடுக்க அறிவுறுத்தல்!

By Sudha

பாஸ் என்கிற பாஸ்கரன் படப்பிடிப்பின்போது நடிகை நயனதாரா மயக்கம் போட்டு விழுந்தார். இதையடுத்து அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் போதிய அளவுக்கு ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தினர்.

நயனதாரா முன்பு போல பொலிவாக இல்லை. மிகவும் மெலிந்து விட்டார். இத்தனைக்கும் கை நிறைய படங்களும் இல்லை. தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் மட்டும்தான் நடித்து வருகிறார். இருப்பினும் அலைச்சல் அதிகம் என்பதால் அவருக்கு உடல் மெலிந்து போய் விட்டது.

இந்த நிலையில் பாஸ் என்கிற பாஸ்கரன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீர் என மயக்கம் வந்து விழுந்து விட்டார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் நேற்று பாஸ் படத்தின் ஷூட்டிங் நடந்தது. ஆர்யா, நயனதாரா நடித்து வந்தனர்.

பிற்பகல் 2 மணியளவில் திடீரென செட்டில் மயங்கி விழுந்தார் நயனதாரா. இதையடுத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டு டாக்டரை வரவழைத்தனர். அவர் வந்து நயனதாராவைப் பரிசோதித்துப் பார்த்தார். பின்னர் போதிய அளவுக்கு ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினார். சரியாக சாப்பிடும்படியும் அட்வைஸ் செய்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது நயனதாரா ஓய்வில் இருந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X