நோ காதல்...!-கார்த்தி

நெல்லை மாவட்டம் விகேபுரம் பகுதியில் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் பட சூட்டிங் நடந்து வருகிறது. இதில் பார்த்திபன், கார்த்தி, ரீமாசென் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் சில நாட்களாக விகே.புரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.
சூட்டிங் ஸ்பாட்டில் கார்த்தி நிருபர்களிடம் பேசுகையில்,
முதல் படத்தில் கிராமத்தான் வேடம் ஏற்றேன். இப்போது நடித்து வரும் ஆயிரத்தில் ஒருவனி்ல் சென்னை வாழ் குப்பத்து மக்களில் ஒருவனாக வேடமேற்றுள்ளேன்.
ஆயுத எழுத்து படத்தில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறேன்.
என் தந்தை சிவக்குமார் சூட்டிங், சினிமா என்று கலைத்துறைப் பக்கம் நாங்கள் வரக் கூடாது என்று நினைத்தார். படிப்பில் எங்களை கவனம் செலுத்தச் சொன்னார். ஆனால் சினிமா இழுத்துவிட்டது.
நடிப்பைப் பொறுத்தவரை எனக்கு கமல் பிடிக்கும். ஆனால் நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவர் வழியில் நல்லது செய்ய ஆசைப்பட்டுத்தான் எனது நற்பணி மன்றம் மூலம் சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன்.
அண்ணன் சூர்யாவுடன் சேர்ந்து 7 மாவட்டங்களில் டியூஷன் ஹோம் நடத்தி வருகிறோம்.
எனக்கு காதலிக்கும் ஆசை இல்லை. பெற்றோர் பார்க்கும் பெண்ணையே மணப்பேன் என்றார் கார்த்தி.
தீபாவளிக்கு ரிலீசாகிறது ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படத்துக்குப் பிறகு தனது உறவினர் ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார் கார்த்தி.


Click it and Unblock the Notifications











