உதைத்த பார்வதி - துடித்த பைட்டர்!

யுனைட்டெட் சிக்ஸ் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் பார்வதி. ஆக்ஷன் படம் இது. பார்வதிக்கும் ஆக்ஷன் காட்சிகளை வைத்துள்ளனர்.
சண்டைக் காட்சிகளில் படு உற்சாகமாக நடித்து வருகிறார் பார்வதி. கால்களால் எதிரிகளை பந்தாடும் காட்சிகளில் ஓவர் ஆர்வம் காட்டுகிறாராம். இதனால் ஒரு ஸ்டண்ட்மேன் துடித்துப் போயிருக்கிறார்.
ஜான் என்ற அந்த ஸ்டண்ட் நடிகரை பார்வதி உதைப்பது போன்ற காட்சி. கால்களில் உதைக்க வேண்டும் பார்வதி. இயக்குநர் ஓ.கே. சொல்லியவுடன் ஓங்கி உதைத்துள்ளார் பார்வதி. ஆனால் தவறுதலாக இரு கால்களுக்கும் நடுவே, முக்கிய ஏரியாவில் உதைத்து விட்டார்.
பலமான உதை விழுந்ததால் துடித்து கீழே விழுந்து விட்டார் ஜான். உடனே ஷூட்டிங் நிறுத்தப்பட்டு டாக்டரை வரவழைத்துள்ளனர். அவர் வந்து ஜானைப் பரிசோதித்து ஆயின்மென்ட் கொடுத்துச் சென்றாராம்.
தெரியாமல் தான் செய்து விட்டதற்காக ஜானிடம் நீண்ட நேரம் மன்னிப்பு கேட்டபடி இருந்தாராம் பார்வதி. இருந்தாலும் ஜான் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நன்றாக எழுந்து நிற்க 2 மணி நேரம் ஆனதாம் ஜானுக்கு.


Click it and Unblock the Notifications











