லண்டனில் ஸ்கை டைவிங்கின்போது நடிகர் அருண் விஜய் காயம்

காவல்துறை என்ற படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இப்படத்தில் நடிப்பதற்காக ஸ்கை டைவிங் பயிற்சி பெற்று வருகிறார். லண்டனில் இந்தப் பயிற்சியை மேற்கொண்டிருந்தார்.
பயிற்சியின் முடிவில், அவர் 13 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, காற்று பலமாக வீசியதால், அருண் விஜய்யால் குறிப்பிட்ட இடத்தில் தரை இறங்க முடியவில்லை. அவரை ஒரு கட்டிடத்தை நோக்கி காற்று இழுத்து சென்றது.
வேகமாக சென்று கட்டிடத்தின் மீது உரசியதால், அருண் விஜய் படுகாயம் அடைந்தார். உடனடியாக, பயிற்சியாளர்கள் விரைந்து வந்து அவரை மருத்துவமனைக்குஅழைத்து சென்று சிகிச்சை அளித்தார்கள்.
ஸ்கை டைவிங் பயிற்சியை பெற்றுள்ள முதல் இந்திய நடிகர் அருண் விஜய்தானாம். இதை அவரே கூறினார்.
More from Filmibeat
actor arun vijay காயம் தமிழ் சினிமா நடிகர் அருண் விஜய் லண்டன் ஸ்கை டைவிங் injury london sky diving tamil cinema


Click it and Unblock the Notifications











