அர்ஜுன் நாயகி சானியா நீக்கம்!

புதுமுக நாயகியாக இருந்தாலும், கூப்பிட்ட போது படப்பிடிப்புக்கு வராமல் டிமிக்கி கொடுத்தாலேயே அவர் மாற்றப்பட்டதாக இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:
அர்ஜூனின் நடிப்பில் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் கலந்த அதிரடிப் படமாக திருவண்ணாமலை உருவாகி வருகிறது.
முதலில் அர்ஜுன் ஜோடியாக மும்பை மாடல் சானியாவை ஒப்பந்தம் செய்திருந்தோம். போட்டோ ஷூட்கூட முடிந்துவிட்டது. அவர்கள் இருவரும் பங்கேற்ற போட்டோசெஷனை நடத்தினேன். புதிய நாயகி என்பதால் பிரச்சினை எதுவும் வராது, கூப்பிட்ட போது வந்து நடித்துக் கொடுப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் இந்தப் பெண்ணோ கால்ஷீட் சொதப்பலில்தான் முதல் படத்தையே ஆரம்பித்தார்.
தொடர்ந்து படப்பிசிப்புக்கு வராமல் தவிர்த்தார். இதனால் சானியாவை நீக்கிவிட்டோம். அவருக்குப் பதிலாக கொக்கியில் நடித்த பூஜா காந்தியை ஒப்பந்தம் செய்துள்ளோம். எதிர்பார்த்த மாதிரி ஒத்துழைப்பு தருகிறார். படமும் வேகம் பிடிக்கத் தொடங்கிவிட்டது என்றார்.
கொக்கி படத்தில் சஞ்சனா என்ற பெயரில் நடித்தவர் தான் இந்த பூஜா காந்தி. கன்னடத்தில் படு பிஸியாக இருக்கும் பூஜா காந்திக்கு, தமிழில் கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு இது. எனவே தான் நடிக்கவிருந்த இரு கன்னடப் பட வாய்ப்புகளைக் கூட உதறிவிட்டு ஆக்ஷன் கிங் நாயகியாகியிருக்கிறார்.
தமிழ் சினிமா தருகிற சம்பளம் அப்படி!


Click it and Unblock the Notifications











