twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டர்ட்டி பிக்சர்ஸுக்காக சில்க்காகவே மாறிப் போன வித்யா பாலன்

    By Siva
    |

    நடிகை வித்யா பாலன் தி டர்டி பிக்சர் படத்திற்காக சிலக் ஸ்மிதாவாகவே மாறியுள்ளார். அந்த அளவுக்கு கேரக்டரோடு ஒன்றிப் போய் நடித்து வருகிறாராம்.

    தி டர்டி பிக்சர் படத்தின் பாடலை படமாக்க வித்யா பாலன் அண்மையில் ஹைதராபாத் வந்தார். ஏற்கனவே அவருக்கு காய்ச்சல் இருந்தும் அதை பெரிதுபடுத்தாமல் நசீருத்தீன் ஷாவுடன் நடித்தார்.

    அந்த பாடல் காட்சியை ஒரு தாமரைக் குளத்தில் படமாக்கினர். பாடலை 2 அல்லது 3 நாட்களில் முடிக்க வேண்டும் என்ற நிலை. அதனால் வித்யா குளத்தில் 4 முதல் 5 மணி நேரம் வரை காய்ச்சலோடு நடித்தார். இதில் முதல் நாளே அவருக்கு காய்ச்சல் அதிகமானது. இதையடுத்து அவரை ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு இயக்குனர் மிலன் கேட்டுக் கொண்டும் பரவாயில்லை என்று கூறி வித்யா நடித்துள்ளார்.

    இந்த பாடல் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் மும்பையில் இருந்து ஹைதராபாத் வந்திருந்தனர். ஒரு நாள் படப்பிடிப்பு நடக்காவிட்டாலும் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் வித்யா நடித்துள்ளார்.

    அடுத்து கர்நாடகாவில் படப்பிடிப்பு நடந்தபோது இயக்குனர் மிலன் வித்யாவிடம் பந்தயம் கட்டினார். படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்திற்கு முன்பு சில்க் மாதிரி அறைகுறை ஆடையுடன் வந்து பேசவேண்டும் என்பது தான் பந்தயம். வித்யா அப்படி செய்யமாட்டார் என்ற நம்பிக்கை மிலனுக்கு.

    அவரது நம்பிக்கை பொய்த்தது தான் மிச்சம். மிலன் சற்றும் எதி்ர்பாரா விதமாக கூடியிருந்த ஆண்களுக்கு முன்பு சில்க் போன்று படு கவர்ச்சிகரமாக உடையணிந்து தைரியமாகப் பேசினார் வித்யா. இதனால் மிலன் பந்தயத்தில் தோற்றுப்போனார்.

    இதையடுத்து யாரும் வித்யா பாலனிடம் பந்தயம் கட்டாதீர்கள் என்று எச்சரித்தார் மிலன்.

    English summary
    Actress Vidya Balan has shocked "The dirty picture" director Milan by addressing a male gathering dressed like Silk Smitha during Karnataka schedule. She did a song sequence in Hyderabad unmindful of high fever.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X