விஜய்யின் 50வது படமான சுறா படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.

அப்போதுதான் படத்தை சன் குழு பார்த்துவிட்டு, தேவையான கரெக்ஷன்களை செய்யச் சொல்லும். எல்லாம் சரியாக வந்தால் ஏப்ரல் முதல்வாரத்தில் படத்தின் விளம்பரங்களை போட ஆரம்பித்துவிடுவார்கள். ஏப்ரல் இறுதியில் படம் வெளியீடு என்பதுதான் இப்போதைய திட்டம்.
எனவே பம்பரமாகச் சுழல்கிறது யூனிட். முதலில் இந்தப் படத்தின் பாடல்களுக்கு அமெரிக்கா போவதாகத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், உடனடியாக லொக்கேஷனை நியூஸிலாந்துக்கு மாற்றிவிட்டார் தயாரிப்பாளர் சங்கிலி முருகன்.
இப்போது விஜய்யும் நாயகி தமன்னாவும் நியூஸிலாந்தில் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த 6 நாட்களில் அனைத்து வேலைகளும் முடிந்துவிடும், அடுத்து ஆடியோ ரிலீஸ்தான் என்கிறார் சங்கிலி முருகன்.
ஏப்ரல் 14ம் தேதி சித்திரை ஸ்பெஷலாக இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதே தேதியில் சூர்யா நடிக்க ஹரியின் சிங்கம் வெளியாகிறது. எனவே ஏப்ரல் 23 அல்லது 30ம் தேதி வருகிறது சுறா!


Click it and Unblock the Notifications











