மரத்தில் மோதிய கேரவன் - உயிர் தப்பினார் நடிகர் பாலா

'அன்பு,' படத்தில் அறிமுகமாகி, 'காதல் கிசு கிசு', 'மஞ்சள் வெயில்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், ஏராளமான மலையாளப் படங்களிலும் நடித்திருக்கும் தமிழ் நடிகர் பாலா.
ஒரு மலையாள படப்பிடிப்புக்காக நேற்று காலை மூலமட்டம் என்ற இடத்துக்கு கேரவனில் புறப்பட்டார்.
அவருடன் கேரவனில் படப்பிடிப்பு குழுவினர் சிலரும் இருந்தார்கள். புலிக்கானம் எலப்பலி என்ற இடத்தில் கேரவன் வந்து கொண்டிருந்தபோது, திடீர் என்று பிரேக் பிடிக்காமல், ஒரு மரத்தின் மீது கேரவன் மோதியது.
இந்த விபத்தில், பாலா காயம் எதுவும் இல்லாமல், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
'இந்த விபத்தில் நான் உயிர் பிழைத்ததே கடவுளின் செயல்தான்...' என்று கூறினார் பாலா.
Comments


Click it and Unblock the Notifications