பரத்துக்கு வயசு 26!

தமிழ் சினிமாவின் வளரும் ஹீரோக்களில் பரத்தும் ஒருவர். விஜய், அஜீத் போல சூப்பர் ஹீரோவாக இல்லாமல் இருந்தாலும் கூட பரத்தின் படங்களுக்கென்று ஒரு பாணி வந்து விட்டது. அதை அனுபவித்து நடித்துக் கொண்டிருக்கிறார் பரத்.
இன்று அவருக்கு 26வது பிறந்த நாள். இதை யுவன் யுவதி படப்பிடிப்பில் கொண்டாடுகிறாராம் பரத். கடந்த ஆண்டு பிறந்த நாளை கொடைக்கானலில் கண்டேன்காதலை படப்பிடிப்பின்போது கொண்டாடினார்.
பரத்தின் நண்பர்கள் ஏற்கனவே சென்னையில் ஒரு பர்த் டே பார்ட்டியை வைத்துக் கொண்டாடி விட்டனராம்.
கடந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாடிய பின்னர் வெளியான கண்டேன் காதலை சிறப்பாக ஓடியதால் மகிழ்ச்சி அடைந்தாராம் பரத். அதேபோல இந்த முறையும் யுவன் யுவதி சிறப்பாக ஓடும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளாராம்.
சரி, வயசாச்சே கல்யாணம் எப்போ என்று கேட்டால், 25 வயதுக்குள் கல்யாணம் செய்து விட வேண்டும் என்று முன்பு நினைத்திருந்தேன். ஆனால் ஒரு வருடம் எக்ஸ்டிராவாகி விட்டது. கண்டிப்பாக இது அரேன்ஞ்ச் மேரேஜ்தான் கவலையே வேண்டாம் என்கிறார் சிரித்தபடி.


Click it and Unblock the Notifications











