நான் அவனில்லை பட நாயகி ஷ்வேதா மேனன் படப்பிடிப்பில் காயம்

சினேகிதியே படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் ஷ்வேதா மேனன். அதன் பிறகு மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் ஜீவனுடன் நான் அவன் இல்லை படத்தின் 2ம் பாகத்தில் ஐந்து நாயகியர்களில் ஒருவராக நடித்தார்.
மாடல் அழகியாக இருந்து நடிகையானவர் ஷ்வேதா. தற்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.
கோழிக்கோடு அருகே பெண்பட்டணம் என்ற படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இதில் ஷ்வேதா கலந்து கொண்டுள்ளார். அப்போது சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதில் எதிர்பாராதவிதமாக கத்தி ஒன்று, ஷ்வேதாவின் கையில் பாய்ந்ததில் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் குபுகுபுவென கொட்டியது.
இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்குப் பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மம்முட்டியுடன் அவர் இணைந்து நடித்த பலேரி மாணிக்யம் என்ற படத்திற்காக கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதை இந்த ஆண்டு பெற்றவர் ஷ்வேதா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











