twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வசந்த பாலனின் அரவாண் படத்துக்காக ரூ 80 லட்சம் செலவில் ஒரு கிராமமே உருவாக்கப்பட்டுள்ளது.

    By Shankar
    |

    வசந்த பாலனின் அரவாண் படத்துக்காக ரூ 80 லட்சம் செலவில் ஒரு கிராமமே உருவாக்கப்பட்டுள்ளது.

    அம்மா க்ரியேஷன்ஸ் சார்பில் T. சிவா தயாரிக்க, ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்சனாகவி, கரிகாலன் நடிக்க, வெயில்,அங்காடித்தெரு வெற்றிக்கு பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கும் படம் 'அரவான்".

    பின்னணி பாடகர் கார்த்திக் முதன்முறையாக இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

    பதினெட்டாம் நூற்றாண்டின் பின்னணியில் நிகழும் கதை இந்தப் படம். அந்த காலகட்டத்தினை நிஜமான காட்சிகளாய் கண்முன் நிறுத்த, படப்பிடிப்புக்கு இடம் தேடிய குழு பாண்டியர்கள் ஆண்ட, போர்க் காலங்களில் ஒளிந்து வாழ்ந்த ஏராளமான மலைப் பகுதிகளைத் தேடினர்.

    மூன்று மாத காலத் தேடலுக்குப்பின் இறுதியாக, மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி மலையினைத் தேர்வு செய்தனர்.

    மக்கள் புழக்கத்தில் இல்லாத மலை இது. முக்கியமாக கல் குவாரிகாரர்கள் கண்படாத மலை!

    இந்த அரிட்டாபட்டி மலை பல குகைகளும், நெடிய பள்ளங்களும் சுனைகளும் நிறைந்த அற்புதமானதொரு மலை. மலையின் ஒரு பக்கத்தில் எண்பது லட்சம் ரூபாய் செலவில் கலை இயக்குனர் விஜய்முருகன் தனது குழுவுடன் ஒரு மலைக் கிராமத்தினை மிக நேர்த்தியாக உருவாக்கிவிட்டார்.

    100 நாணல் வீடுகள், பனை ஓலை வீடுகள், கல் வீடுகள், பெரிய கருப்பு கோயில், இன்றைய சோம்பேறி மடம் என்று சொல்லப்படுகின்ற மந்தை என அச்சு அசலான கிராமம்!

    கொளுத்தும் வெயிலில் 500 துணை நடிகர் நடிகைகளுடன் அரவாண் படப்பிடிப்பு இந்த கிராமத்து செட்டில் தொடர்கிறது.

    இதுகுறித்து இயக்குநர் வசந்தபாலன் கூறுகையில், "பதினெட்டாம் நூற்றாண்டினை பிரதிபலிப்பதற்கு இம்மலை முக்கியமாக தேவைப்பட்டது. இந்த மலையும் எண்பது லட்ச ரூபாய் செலவில் போடப்பட்ட செட்டும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்," என்றார்.

    English summary
    The film ‘Aravaan’ is produced by Amma Creations and the casting include Aathi, Pasupathi, Archana Kavi of Mollywood fame, Thanshika and Karigalan. Vasantha Balan of ‘Veyil’ and ‘Angadi Theru’ fame is directing this movie. Both his previous projects received immense critical acclaim. Art Director Vijay Murugan set up a grandeur village with the help of a huge art work team. The place has hundreds of huts made of bamboo straws, palm leaves and stones. It also includes ‘Karuppan Temple’ which is also popularly referred to as ‘somberi madam’ these days. The film is being shot with many character artists and about five hundred junior artists!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X