For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓரம்போ...ரீமிக்ஸ்: சுந்தர்-சுஜா குத்தாட்டம்!

    By Staff
    |

    Suja with Sundar C
    இனி தனது எல்லாப் படங்களிலும் இசைஞானி இசையமைத்த சூப்பர்ஹிட் பாடல் ஒன்றின் ரீமிக்ஸ் இடம்பெற்றே தீர வேண்டும் என அன்புக் கட்டளை போட்டிருக்கிறாராம் சுந்தர் சி.

    சமீபத்தில் வெளியான அவரது சண்ட படத்தில் வாடி என் கப்பக் கிழங்கே ரீமிக்ஸ் இடம் பெற்று பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை சுந்தரே பாடியிருந்தார்.

    இப்போது குஷ்பு தயாரிப்பில் அவர் நாயகனாக நடித்து வரவிருக்கும் ஐந்தாம் படை படத்தில் இளையராஜாவின் இன்னொரு கலக்கல் பாடல் இடம்பெறவுள்ளது.

    அது 'பொண்ணு ஊருக்குப் புதுசு' படத்தில் இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் குழுவினருடன் பாடிய ஊரையே கலக்கிய ஓரம்போ... ஓரம்போ... ருக்குமணி வண்டி வருது... பாடல்தான்.

    டி.இமான் இசையில் ரீமிக்ஸாக வரவிருக்கும் இந்தப் பாடலுக்கு குத்தாட்டக் குமரி சுஜாவுடன் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறாராம் சுந்தர் சி.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X