பரத் பிறந்தநாள்: கேக் ஊட்டிய தமன்னா!

ஜி தனஞ்செயன் வழங்கும் மோசர் பேரின் புதிய படமான கண்டேன் காதலை படப்பிடிப்பு அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
நேற்று கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்தது. நேற்று பரத்துக்குப் பிறந்த நாள் என்பதால், படப்பிடிப்புக் குழுவினர் பிரமாண்ட கேக் வரவழைத்தனர். அந்தக் கேக்கை வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார் பரத்.
அவருக்கு கேக் ஊட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் படத்தின் நாயகி தமன்னா. இயக்குநர் கண்ணன் மற்றும் யூனிட் டெக்னீஷியன்கள் அனைவரும் வாழ்த்துத் தெரிவித்தனர். படத்தின் தயாரிப்பாளர் ஜி தனஞ்செயனும் தனுது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
கண்டேன் காதலை படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு இது. விரைவில் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
More from Filmibeat
கண்டேன் காதலை சினிமா தமன்னா தமிழ் பரத் பிறந்த நாள் மோசர் பேர் bharath cinema kandein kadhalai moser baer tamanna


Click it and Unblock the Notifications











