twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'குருவி'யால் சலசலப்பு!

    By Staff
    |

    Trisha
    சேலத்தில் நடந்த குருவி படப்பிடிப்பில் குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நடிக்கத்தான் குழந்தைகள் வரவழைக்கப்பட்டிருப்பதாக படக் குழுவினர் தெரிவித்ததால் பரபரப்பு அடங்கியது.

    விஜய், திரிஷா இணையில், தரணி இயக்கத்தில், உதயநிதியின் தயாரிப்பில் உருவாகும் படம் குருவி. இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்தது.

    தற்போது சேலம் பக்கம் முகாமிட்டு சில காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். அங்கு கொத்தடிமைத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார் தரணி.

    இதற்காக சேலம் சுற்று வட்டாரத்தைச் ேசர்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர் படப்பிடிப்புக்கு மினி லாரிகளில் அழைத்து வரப்படுகின்றனர். காலையில் அழைத்து வந்து மாலையில் திரும்பக் கொண்டு போய் விட்டு விடுகின்றனர்.

    இந்த நிலையில் குழந்தைத் தொழிலாளர்களை யாரோ லாரியில் ஏற்றி கொண்டு போய் வருவதாக சேலம் போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்து சேலம் பஸ் நிலையப் பகுதியில் தயாராக இருந்த போலீஸார், குழந்தைகள் அடங்கிய லாரி வந்தபோது மடக்கி விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அனைவரும் படப்பிடிப்புக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக லாரியில் இருந்த படக் குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் லாரியை தொடர்ந்து செல்ல அனுமதித்தனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X