பிஜி தீவில் படமாகும் முதல் தமிழ்ப் படம்!

By Shankar

Nikesha Patel
இந்தியர்கள் அதிகம் வாழும் நாடு என்று கூறப்பட்டாலும், இந்தியப் படங்கள் எதுவும் படமாக்கப்படாத நாடு என்ற பெயர் பிஜிக்கு உண்டு!

இந்தக் குறையைப் போக்கும் வகையில் தனது அடுத்த படத்தை பிஜித் தீவில் படமாக்குகிறார் இயக்குநர் கே எஸ் அதியமான்.

தொட்டால் சிணுங்கி, சொர்ணமுகி, தலைமுறை, ப்ரியசகி, தூண்டில் படங்களைத் தொடர்ந்து தமிழில் கே எஸ் அதியமான் இயக்கும் அடுத்த படம் நண்பா.

முதல்முறையாக நகுலும் சாந்தனுவும் இணைந்து நடிக்க, இளமை துள்ளும் நாயகியாக அறிமுகமாகிறார் நிகிஷா பட்டேல்.

தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக கொமரம் புலி படத்தில் நடித்தவர் நிகிஷா. லண்டன் பெண்ணான நிகிஷா நண்பா மூலம் தமிழ் உலகுக்கு வருகிறார்.

நகுலும் சாந்தனுவும் நண்பர்களாக நடிக்கின்றனர்.

நண்பா முழுக்க முழுக்க ஆஸ்திரேலியா மற்றும் பிஜி தீவுகளில் தொடங்கி நடக்கிறது.

நகுல், சாந்தனு, நிகிஷா பட்டேல் இவர்களுடன் ஜெயப்ரகாஷ், சுஜா, பஞ்சு சுப்பு, நீலிமா, லொள்ளு சபா ஜீவா, தீபா நரேந்திரா மற்றும் பிஜு தீவுகளில் உள்ள இந்திய நடிகர்களும் நடிக்கின்றனர்.

பிஜி தீவுகளில் படமாகவிருக்கும் முதல் இந்தியத் திரைப்படம் நண்பா என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் மேனனின் அசோஸியேட் ராம் குணசேகரன் ஒளிப்பதிவை கவனிக்க, ஜெயம், சம்திங் சம்திங், வெண்ணிலா கபடிகுழு படங்களின் கலை இயக்குநர் ஆனந்தன் கலையைக் கையாள, ஸ்டன்ட் சிவா சண்டைப் பயிற்சியை கவனிக்கிறார்.

நடனம் தினேஷ். எடிட்டிங் ராம்ப். படத்தை இணைந்து தயாரிக்கிறார்கள் ராஜா, கே தமிழரசன். தயாரிப்பு: அங்கை சினிஆர்ட்ஸ் டாக்டர் டி ஜீவகன்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் கே எஸ் அதியமான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X