புதுமுக நடிகையிடம் நகை அபேஸ்!
புதுமுக நடிகை ராதிகா மல்ஹோத்ராவிடம் பணம், நகை மற்றும் கிரெடிட் கார்டுகளை அபேஸ் செய்த மர்ம ஆசாமியைப் போலீஸ் தேடுகிறது.
அண்ணாநகரில் நேற்று நடைபெற்ற சினிமா படப்பிடிப்பு ஒன்றில் இந்த சம்பவம் நடந்தது.
இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர் பரந்தாமன். இவர் தற்போது தனது குருவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக செல்வராகவன் பி.இ. என்ற படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகனாக கிஷன் என்ற புதுமுகம் நடிக்க, கதாநாயகியாக மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியான ராதிகா மல்கோத்ரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் நேற்று அண்ணாநகரில் உள்ள 17வது பிரதான சாலையில் நடைபெற்று வந்தது. டீக்கடை போன்று செட் அமைக்கப்பட்டு கதாநாயகனும், கதாநாயகியும் அங்கு சந்தித்துப் பேசுவது போன்ற காட்சியை இயக்குனர் பரந்தாமன் படமாக்கிக் கொண்டிருந்தார்.
ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்க்க ஏராளமான பொதுமக்கள் அந்த இடத்தில் குவிந்தனர்.
அப்போது நடிகை ராதிகா மல்கோத்ராவின் கைப்பையும், மேக்கப் சாதனங்கள் அடங்கிய பெட்டியும் காணாமல் போனது.
அந்தப் பையில் ரூ.5,000, 4 கிரெடிட் கார்டுகள், ஒரு மோதிரம், டிரைவிங் லைசென்ஸ் இருந்தன.
கிரெடிட் கார்டுகளும் பணமும் காணாமல் போனதைக் கண்ட ராதிகா அதிர்ச்சியில் அழத் தொடங்கினார். இயக்குனர் அவரை சமாதானப்படுத்தினர்.


Click it and Unblock the Notifications











