அவன் இவன் ஷூட்டிங்... விஷால் காயம்!

By Chakra

பாலாவின் அவன் இவன் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் விஷால் படுகாயம் அடைந்தார்.

டூப் இல்லாமல் சண்டைக் காட்சியில் நடித்தபோது தவறி விழுந்ததில் இந்த காயம் ஏற்பட்டது.

வத்தலகுண்டு அருகே அவன் இவன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படத்தில் ஆர்யா - விஷாலுக்கு இணையாக, ஆனால் வில்லன் பாத்திரத்தில் நடிக்கும் ஆர்.கே.வுடன் விஷால் மோதுவது போன்று சண்டைக்காட்சி எடுத்தனர். அப்போது உயரத்தில் இருந்து தவறி விஷால் கீழே விழுந்து விட்டார்.

அவருக்கு தோள் பட்டையில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தார். தோள்பட்டை இறங்கி இருந்தது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகிறார்கள்.

வானம் படப்பிடிப்பில் சிம்பு காயம்...

சென்னையில் நடக்கும் வானம் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சிம்பு காயமடைந்தார். ஒரு காட்சியில், மோட்டார் சைக்கிளில் சிம்பு வேகமாக செல்வது போன்ற காட்சியை திருவல்லிக்கேணி பகுதியில் படமாக்கினர். அப்போது திடீரென்று நிலை தடுமாறி பைக்கோடு கீழே விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

இதுபற்றி சிம்பு கூறுகையில், "நான் தவறி விழுந்தபோது பின்னால் வந்த கார் மோதி இருக்கும் அதிர்ஷ்டவசமாக தப்பினேன். ஆஸ்பத்திரிக்கு உடனடியாக அழைத்து போய் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X