அகம் புறம் படப்பிடிப்பில் தீ விபத்து

By Staff

Shaam with Mallika Kapoor
அகம் புறம் படப்பிடிப்பில் எதிர்பாராமல் பெட்ரோல் தீப்பற்றிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஷாம்-மீனாட்சி நடிக்கும் புதிய படம் அகம் புறம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

நேற்றைய படப்பிடிப்பில் வில்லன் பெல்லி முரளியோடு ஷாம் மோதுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. காட்சிப்படி வில்லன் மீது பெட்ரோல் ஊற்றி ஷாம் எரிக்க வேண்டும். ஒரு முறை டூப்பை வைத்து ரிகர்சல் பார்த்துக் கொண்ட பின்னர் காட்சி படமாக்கப்பட்டது.

ஷாம் பெட்ரோலை ஊற்றி தீ வைக்க, அது எதிர்பார்த்ததை விட அதிக ஜுவாலையுடன் எரிந்தது. இதில் பக்கத்தில் நிந்றிருந்தவர்கள் மீதும் தீ பட்டது. ஷாம் மீதும் தீ பட்டதைப் பார்த்து இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் பதறிப் போனார்கள். யூனிட் ஆட்கள் சிலருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சமீபத்தில் க்ளிக் தெலுங்குப் படத்தில் நடித்தபோது ஷாமுக்கு விபத்து ஏற்பட்டது. அந்தப் படமும் தெலுங்கில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X