மயங்கி விழுந்தார் நயனதாரா

இடையில் ஏற்பட்ட சிறு தொய்வுக்குப் பிறகு தற்போது நயனதாரா படு பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். விஷாலுடன் சத்யம், ரஜினியுடன் குசேலன், அஜீத்துடன் ஏகன் உள்ளிட்ட படங்களில் மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யுடன் சிங்கம் உள்ளிட்ட நான்கு படங்களிலும் புக் ஆகியுள்ளார்.
கடந்த 4 நாட்களாக சென்னையில் விஷாலுடன் சத்யம் படத்திற்காக மழையில் நனைந்தபடி எடுக்கப்பட்ட பாடல் காட்சியில் நடித்துக் கொடுத்தார். 4வது நாள் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 20 மணி நேரத்திற்கும் மேல் படமாக்கப்பட்டது.
இந்த ஷூட்டிங்கை முடித்துக் கொண்டதும், கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல், அடுத்த விமானத்தைப் பிடித்து ஹைதராபாத் பறந்தார். அங்கு குசேலன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில், பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில், ரஜினிகாந்த்துடன் பாடல் காட்சியில் பங்கேற்றார். சத்யம் படத்திற்கு டான்ஸ் வடிவமைத்த பிருந்தாதான் இதற்கும் டான்ஸ் இயக்குநர்.
பாடல் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது பிற்பகல் 1 மணியளவில் நயனதாராகவுக்கு தலை சுற்றல் வந்தது. இதனால் இருக்கையில் உட்கார்ந்தவர் அப்படியே மயங்கி விட்டார்.
இதையடுத்து டாக்டரை வரவழைத்தனர். அவர் வந்து பார்த்து, நயனதாராவுக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
ஆனால் நயனதாரா ஓய்வை தவிர்த்து விட்டார். தொடர்ந்து நடித்து
வந்தார். இந்த நிலையில் மறுபடியும் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஓய்வெடுக்காமல் தொடர்ந்து நடித்ததால் வந்த பிரச்சினை இது என்று தெரிவித்தனர்.
ஹைதராபாத் காமினேனி மருத்துவமனையில் நயனதாரா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நல்ல ஓய்வு அவசியம் என டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனராம்.
சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டனம் என பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கிறார் நயனதாரா. தற்போது கடும் வெயில் நிலவி வருவதாலும், தொடர்ந்து ஓய்வெடுக்காமல் பறந்து கொண்டிருப்பதாலும் நயனதாராவின் உடல் நிலை மிகவும் பலவீனமாகியுள்ளது. இதுவே குறைந்த ரத்த அழுத்தத்திற்கு கொண்டு போய் விட்டது.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஈ படப்பிடிப்பின்போதும் நயனாரா மயங்கி விழுந்தார். சில மாதங்களுக்கு முன்பு கூட ஹைதராபாத் விமான நிலையத்தில் இப்படித்தான் மயக்கம் போட்டார் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











