மக்கள் மத்தியில் சல்மான்... மறைவிடத்தில் காமிரா வைத்து படப்பிடிப்பு!

By Shankar

பாடிகார்ட் இந்திப் படத்துக்காக சால்மான்கானை யாரும் அறியாத வகையில் மக்கள் மத்தியில் சாதாரணமாக நடக்கவிட்டு ரகசிய இடத்திலிருந்து படமாக்கினர்.

இந்தக் காட்சி மிகத் தத்ரூபமாக அமைந்துள்ளதால் இயக்குநர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இந்தி நடிகர் சல்மான்கான் பாடிகார்ட் என்ற படத்தில் நடிக்கிறார். மலையாளதச்தில் இதே பெயரில் வெளியாகி, தமிழில் விஜய் நடிப்பில் காவலனாக வந்த படம்தான் இப்போது இந்திக்குப் போயுள்ளது. அங்கு இந்தப் படத்துக்குப் பெயர் பாடிகார்ட் (தெலுங்கிலும் இதே பெயர்தான்).

இதன் படப்பிடிப்பு தெற்கு மும்பையில் மக்கள் நெரிசல் மிகுந்த பிளாரோ பவுண்டன் பகுதியில் நடந்தது. கூட்டத்தில் 30 விநாடிகளுக்கான காட்சிகளை எடுத்தனர். படப்பிடிப்பு நடைபெறுவது பற்றி முன் கூட்டி யாருக்கும் அறிவிக்கவில்லை.

திடீரென்று சல்மான்கான் காரில் வந்து இறங்கினார். பாதுகாப்பாளர்கள் யாரும் இல்லாமல் கூட்டத்தோடு கூட்டமாய் இறங்கி நடந்தார்.

முன்னால் ஒரு பெண் சென்று கொண்டு இருந்தார். அவருக்கு பாடிகார்ட்டாக மிடுக்காக நடந்து சென்றார் சல்மான்.

உயரமான கட்டிடங்களில் ரகசிய கேமராக்கள் வைத்து இக்காட்சியை படமாக்கினர். படப்பிடிப்பு முடிந்ததும் தயாராக நின்ற காரில் ஏறிப் பறந்தார். ஆனால் மக்கள் யாரும்சரியாகக் கவனக்கவில்லை இதை.

இது குறித்து படப்பிடிப்பு குழுவினர் கூறும்போது, மக்கள் கூட்டத்தில் சல்மான்கான் கலந்ததுமே நெஞ்சு திக் திக் என அடித்தது.

பாதுகாவலர்கள் உடன் செல்லாததால் பயந்தபடி இருந்தோம். படப்பிடிப்பு முடிந்து சல்மான்கான் காரில் ஏறிய பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்டோம், என்றனர்.

மலையாளம் மற்றும் தமிழில் இந்தப் படத்தை இயக்கிய சித்திக்தான் இந்தியிலும் இயக்குகிறார். இதன் தெலுங்குப் பதிப்புக்கும் சித்திக்தான் இயக்குநர்.

சல்மான்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X