பனி மழையில் சிக்கிய ஜீவா, கார்த்திகா!

வெளிநாடுகளுக்குப் படப்பிடிப்புக்குப் போகும் தமிழ் சினிமாக்காரர்கள் ஏதாவது ஒரு விபத்தில் சிக்குவது இப்போது அதிகரித்து வருகிறது. என்ன காரணம் என்றுதான் தெரியவில்லை. அடிக்கடி கடலில் விழும் செய்திகள் சமீப காலமாக வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் நார்வே நாட்டுக்குப் படப்பிடிப்புக்குப் போன இடத்தில் பனி மழையில் சிக்கிக் கொண்டனராம் கோ படப்பிடிப்புக் குழுவினர்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படம்தான் கோ. இதில் ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தில் வரும் பாடல் காட்சிகளைப் படமாக்குவதற்காக 20 பேர் கொண்ட குழுவுடன் கோ படக்குழுவினர் நார்வே போயுள்ளனர்.
நார்வேயில் ஒரு இடத்தில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தனர். அது சரியான மலைப் பகுதியாம். ஜீவாவும், கார்த்திகாவும் பாடல் காட்சிக்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது பார்த்து திடீரென பலத்த பனி மழை பெய்யத் தொடங்கி விட்டது. இதனால் பனி மழையில் சிக்கி படப்பிடிப்புக் குழுவினர் தடுமாறினர். எப்படி கீழே போவது என்பது தெரியவில்லையாம்.
இவர்களின் தடுமாற்றத்தை அறிந்த ராணுவ மீட்புக் குழுவினர் விரைந்து வந்தனராம். கிட்டத்தட்ட 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக ஜீவாவையும், கார்த்திகாவையும், இன்ன பிறரையும் பத்திரமாக மீட்டனராம். அதன் பிறகுதான் அனைவருக்கும் போன உயிர் திரும்பி வந்ததாம்.
வெளிநாடுகளுக்குப் படப்பிடிப்புக்குப் போகும்போது சூதானமா இருந்துக்குங்கப்பு...!


Click it and Unblock the Notifications











