twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜனநாதனின் சரித்திரக் 'காதல்'!

    |

    Jayam Ravi with Jananathan
    தொடர்ந்து மூன்று வித்தியாசமான படங்கள் மூலம் இன்று கோடம்பாக்கத்தின் மரியாதைக்குரிய இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஜனநாதன்.

    முதல் படம் இயற்கையில் கடல் புரத்து மனிதர்களின் வாழ்க்கையை ஒப்பனையின்றிச் சொன்னவர், ஈ படத்தில் நகரத்து சேரிவாசிகள் என ஒதுக்கப்பட்ட மக்களின் வயிற்றுப் பாட்டையும் அதை விஞ்ஞானம் எப்படி தவறாக பயன்படுத்துகிறது என்பதையும் தத்ரூபமாகச் சொல்லி பாராட்டுக்களைப் பெற்றார்.

    இப்போது தனது மூன்றாவது படத்தில் காட்டின் மைந்தர்களான பழங்குடிகள் மற்றும் இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி எடுத்து வெற்றி கண்டுள்ளார். இந்த தீபாவளிக்கு அவர்தான் நிஜமான நாயகன் எனும் அளவு பேராண்மையின் வெற்றி பார்க்கப்படுகிறது.

    படத்தின் நாயகன் ஜெயம் ரவி, நிஜமாகவே சொல்கிறேன்... ஜனா சார் முன்பு நானெல்லாம் ஒன்றுமே இல்லை. அவர் மிகப்பெரிய கல்வி மையம். நான் அதில் படித்த மாணவன் என்பகதே பொருந்தும். வாழ்க்கையில் எனக்கெல்லாம் இப்படியொரு படம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை, என்கிறார் நிஜமான உணர்வோடு.

    அடுத்த ஜனநாதன் எடுக்கப் போகும் படம் அக்மார்க் காதல் படைப்பாம். ஆனால் வழக்கமான காதல் அல்ல.. லைலா - மஜ்னு, ரோமியோ - ஜூலியட், சலீம் - அனார்கலி போல சரித்திரக் காதலை மிகைப்படுத்தாமல், அன்றைய மனிதர்களின் நிஜமான வாழ்க்கை முறைப் பின்னணியில் சொல்லப் போகிறாராம்.

    "கிரேக்கக் காதல் கதைகள் அல்லது இந்தியில் எடுக்கப்படும் காதல் கதைகள் உலகம் முழுக்க வரவேற்புப் பெறும்போது, அதுபோன்றதொரு பின்னணியில், அதைவிட தரத்தோடு தமிழில் எடுத்தால் அதுவும் உலக அளவில் நிச்சயம் வரவேற்புப் பெறும் என்று நம்புகிறேன். அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளேன்..", என்கிறார் ஜனநாதன்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X