twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    30 ஆண்டுக்கு பின் வந்த புரடக்ஷன் கார்!

    By Staff
    |

    Surulirajan
    மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜனின் மனைவி நெகிழ்ச்சியுடன் உள்ளார். காரணம், கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பின்னர் சுருளிராஜனின் வீடு தேடி வந்த சினிமா தயாரிப்பு நிறுவன கார் ஏற்படுத்திய நெகிழ்ச்சி அது.

    இன்றைக்கு வடிவேலு உட்கார்ந்துள்ள இடத்தில் அந்தக் காலத்தில் அம்சமாக அமர்ந்திருந்தவர் சுருளிராஜன். கிட்டத்தட்ட அத்தனை சூப்பர் ஸ்டார்களின் படங்களிலும் தவறாமல் இடம் பெற்றிருந்தவர் சுருளி.

    அவர் இல்லாமல் ரஜினி, கமல் படங்கள் இல்லை என்று கூறும் அளவுக்கு இருவரது படங்களிலும் தவறாமல் நடித்து வந்தவர். குறிப்பாக ரஜினியின் படங்களில் தவறாமல் சுருளியைப் பார்க்கலாம்.

    இன்றைக்கு பிரபலமாக இருக்கும் மதுரை ஸ்லாங் காமெடியை அன்றைக்கே பாப்புலராக்கியிருந்தவர் சுருளிராஜன்.

    மறைந்த சுருளிராஜன் இப்போது வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார் விவேக் மூலமாக. சுந்தர்.சி. நடிக்க, ஏ.வெங்கடேஷ் இயக்க, உருவாகும் வாடா படத்தில் சுருளிராஜன் கெட்டப்பில் நடிக்கிறார் விவேக்.

    அவரது ஹேர்ஸ்டைல் உள்பட அப்படியே சுருளிராஜனை பிரதிபலிக்கும் வகையில் வேடமிட்டு நடிக்கும் விவேக், இப்படத்திற்காக ஒரு பெரிய சுருளிராஜனின் படத்தைக் கேட்டுள்ளார். தயாரிப்பாளர் தரப்பு பல இடங்களில் தேடியும் படம் கிடைக்கவில்லை.

    இறுதியில் சுருளிராஜனின் மனைவியை அணுகியுள்ளனர். கணவர் மறைவுக்குப் பின்னர் எந்த சினிமா நிறுவன காரும் தனது வீட்டுக்கு வராமல் இருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் வீடு தேடி வந்ததால் நெகிழ்ச்சி அடைந்துள்ளார் சுருளிராஜனின் மனைவி.

    பூஜை அறையில் வைத்திருந்த பெரிய சைஸ் சுருளிராஜன் படத்தை எடுத்துக் கொடுத்து கண்ணீர் விட்டுள்ளார்.

    முப்பது வருஷத்துக்கு முன் அவரை ஷூட்டிங்கிற்கு அழைப்பதற்காக எங்கள் வீட்டிற்கு புரொடக்ஷன் கார் வந்தது. அதன் பிறகு இப்போதுதான் புரொடக்ஷன் கார் வந்திருக்கிறது என உணர்ச்சிவசப்பட்டாராம் சுருளியின் மனைவி.

    மேலும், விவேக்கைத் தொடர்பு கொண்ட அவர், அவரது கேரக்டரை படத்தில் பயன்படுத்துவதற்காக நன்றியும் கூறினாராம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X