எங்கே நயன்தாரா?-ரசிகர்கள் கலாட்டா!

By Staff

Nayanatara
நயன்தாராவின் கட் அவுட்டைப் பார்த்துவிட்டு, எங்கே நயன்தாரா எனக் கேட்டு அவரது ரசிகர்கள் பெரும் ரகளையில் இறங்கினர். அவர்களைச் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டதாம் படக்குழுவினருக்கு.

திருநா என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் கதாநாயகனாக வரும் சுபாஷ் நடிகை நயன்தாராவின் ரசிகர் மன்ற தலைவர் கேரக்டரில் நடிக்கிறார்.

எனவே நயன்தாரா கட் அவுட்கள் மற்றும் அவரது படங்களுடன் பாண்டிச்சேரி அருகே உள்ள அனுமந்தை கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

கதை, திரைக்கதை வசனம் எழுதி ரவி எம்.எஸ். இயக்குகிறார். சில தினங்கலுக்கு முன் கதாநாயகன் சுபாஷும் அவரது மாமாவாக போஸ் வெங்கட்டும், நயன்தாரா ரசிகர் மன்ற அலுவலகத்தை திறப்பது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டன.

இதற்காக அந்த பகுதி முழுவதும் பல லட்சம் செலவில் நயன்தாரா கட்அவுட்கள் வைக்கப்பட்டன. கொடி தோரணங்களும் கட்டப்பட்டன.

ரசிகர் மன்றத்தை திறக்கும் காட்சியில் நயன்தாராவும் கலந்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி அந்த பகுதியில் பரவியதும் ரசிகர்கள் குவிந்துவிட்டனர்.

படப்பிடிப்பு நடந்த இடத்தில் அவர்கள் திரண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. படப்பிடிப்பு குழுவினர் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினர். மக்களை விலகிப் போகுமாறு கெஞ்சினர்.

ஆனால் நயன்தாராவை பார்க்காமல் போகமாட்டோம் என்று கூறி அவஹரது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டார்கள். நயன்தாரா கட்அவுட் இருக்கும்போது, அவர் எப்படி காணாமல் போவார்... வரச்சொ்ல்லுங்கள் அவரை. பார்த்துவிட்டுத்தான் நாங்கள் போவோம், என்று அடம்பிடித்தனர்.

இதனால் மூன்று மணிநேரம் படிப்பிடிப்பை நடத்த முடியவில்லையாம்.

நயன்தாரா ரசிகர் மன்றம் திறக்கும் காட்சியைத்தான் எடுக்கிறோம். நயன்தாரா வரவில்லை என்று சொல்லி இயக்குனர் ரவி கெஞ்சினார். தயாரிப்பாளர் ஈகை கே.கருணாகரனும் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கூட்டத்தினரை கேட்டுக் கொண்டார்.

உண்மை ஓரளவு புரிந்த பிறகுதான் ரசிகர் கூட்டம் கலையத் துவங்கியது. இதன் பிறகு நயன்தாரா கட்அவுட் சம்பந்தப்பட்ட காட்சியை மட்டும் செட்டில் வைத்து எடுத்துக் கொள்ள முடிவு செய்து, அன்றைய படப்பிடிப்பை ஏறக்கட்டினர். வேறு காட்சிகளைப் படம் பிடித்தனர்.

இதை முதலிலேயே செய்திருக்கலாம்...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X