பையா ஷூட்டிங் தொடங்கியது

By Staff

Karthi in Paiya
நயனதாரா சர்ச்சை மற்றும் கார்த்தியின் வருகையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தடங்கலாகி வந்த லிங்குச்சாமியின் பையா பட ஷூட்டிங் ஒரு வழியாக தொடங்கி விட்டது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சிக்கிக் கொண்டு மீண்டு வர முடியாமல் தவித்தார் கார்த்தி. இதனால் லிங்குச்சாமியின் தயாரிப்பில் உருவாகவிருந்த பையா பட ஷூட்டிங் தாமதமானது.

இந்த நிலையில் படத்தின் நாயகியாக புக் ஆகியிருந்த நயனதாரா திடீரென சம்பளப் பிரச்சினையைக் காரணம் காட்டி விலகிக் கொண்டதால் புது நாயகியைப் போட வேண்டியதாயிற்று.

ஆனால் அதிக சிரமம் இல்லாமல் தமன்னா நாயகியாக கிடைத்தார். நயனதாரா கேட்ட தொகையை விட முக்கால்வாசி சம்பளத்தை மட்டுமே கொடுத்து இப்படத்தில் தமன்னாவைப் புக் செய்துள்ளார் லிங்குச்சாமி.

இந்த நிலையில் கார்த்தியும், வந்து விட்டதால் படப்பிடிப்பை தொடங்கி விட்டார் லிங்குச்சாமி.

முதல் நாள் ஷூட்டிங் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் பெங்களூருக்கு அருகே நடந்தது.

இப்படத்தின் கதை நெடுஞ்சாலைகளில் நடப்பது போல இருப்பதால், படம் முழுக்க நெடுஞ்சாலைகளிலேயே படமாக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக நெடுஞ்சாலைகளில் படப்பிடிப்பை நடத்தி மகாராஷ்டிர நெடுஞ்சாலையில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார் லிங்குச்சாமி.

பீமா படத்திற்குப் பிறகு லிங்குச்சாமி இயக்கும் படம் இது. இப்படத்தை அவரது திருப்பதி பிரதர்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கிறார். அவருடைய அண்ணன் போஸ்தான் இப்படத்தின் தயாரிப்பாளர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X