தம் மரோ தம்.... தீபிகா முதுகைக் கடித்த கட்டெறும்பு!
பாடல் காட்சி சிறப்பாக, ஒரிஜினலாக வரவேண்டும் என்பதற்காக, முதுகில் கட்டெறும்புகளுடன் நடனம் ஆடி அசத்தினார் தீபிகா படுகோன்.
பாலிவுட்டின் நம்பர் ஒன் ஹீரோயின், ரஜினியின் அடுத்த பட நாயகி தீபிகா படுகோன் இப்போது ரோஹன் சிப்பியின் 'தம் மரோ தம்' படத்தில் நடித்து வருகிறார்.
இதில் ஒரு பாடல் காட்சி சமீபத்தில் மும்பையில் படமாக்கப்பட்டது. காட்சிப்படி, பெரிய கட்டெறும்புகள் தீபிகாவின் முதுகில் ஊர்ந்து செல்ல வேண்டும். அதை க்ளோஷப்பில் காட்டுவது போல காட்சியை அமைத்திருந்தார் இயக்குநர். ஆனால் இந்த வகை கட்டெறும்புகள் கடித்தால் பெரிதாக வீங்கிவிடும்.
எனவே தீபிகாவுக்கு டூப் போட்டுவிடலாம்... அல்லது கட்டெறும்புகளை அனிமேஷனில் காட்டிவிடலாமா என்றெல்லாம் இயக்குநர் யோசித்துக் கொண்டிருந்தாராம்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட தீபிகா, "காட்சி ஒரிஜினலாக வரட்டும். அனிமேஷனோ டூப்போ வேண்டாம். என் முதுகில் கட்டெறும்புகளை விடுங்கள், பார்த்துக் கொள்ளலாம்," என்று துணிச்சலாகக் கூற, ஆடிப்போய் விட்டாராம் இயக்குநர்.
தன் முடிவில் உறுதியாக இருந்த தீபிகா, கடைசியில் கட்டெறும்பு முதுகில் ஊற, அந்த நடனத்தை வெற்றிகரமாக ஆடி முடித்துள்ளார். நடனம் முடிந்து பார்த்தபோது, தீபிகாவின் முதுகில் எக்கச்சக்க சிவப்பு... கட்டெறும்புகளுக்கு தெரியவில்லை அது பாலிவுட்டின் நம்பன் ஒன் நடிகை என்று... கடித்துத் தள்ளிவிட்டிருந்தன.
"இது மறக்க முடியாத வலி மிகுந்த அனுபவம்தான். ஆனால் காட்சி நிஜமாக வரவேண்டும். அதில்தான் ஒரு நடிகையாக முழு திருப்தி இருக்கிறது. அந்த வகையில் எனக்கு இந்தப் பாடல் திருப்தியைத் தந்தது. என நடனத்தை மானிட்டரில் பார்த்தபோது கட்டெறும்பு கடி மறந்துவிட்டது", என்கிறார் தீபிகா.


Click it and Unblock the Notifications











