சரத்குமார், ராதாரவி 'டேரா'- தங்குமிடத்தை மாற்றிய பாலா

இயக்குனர் பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா, அம்பிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். படக் குழுவினர் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள ரிசார்டில் தங்கியுள்ளனர்.
நேற்று ஆய்குடியில், 'திருமந்திரம்' படப்பிடிப்பு தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு ராதாரவி, சரத்குமார், வாகை சந்திரசேகர், உள்ளிட்ட நடிகர்கள், இயக்குனர்கள், ஆர்.கே செல்வமணி ஆகியோர் வந்திருந்தனர்.
பாலா படக்குழுவினர் தங்கியிருந்த அதே ஐந்தருவி ரிசார்ட்டில் இவர்களும் அறைகள் எடுத்து தங்கினர்.
இந் நிலையில் இயக்குனர் பாலா அந்த ரிசர்டில் இருந்து தனது அறையை திடீரென காலி செய்து விட்டு குற்றாலம்-செங்கோட்டை சாலையில் உள்ள ஒரு காட்டேஜுக்கு சென்றுவிட்டார்.
அவர் எதற்காக அறையை காலி செய்தார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. ஆனால், அவர் தங்கியிருக்கும் இடம் பற்றிய தகவல் யாருக்கும் தெரியக் கூடாது என பாலா விரும்புவாராம்.
அதேசமயம் படப்பிடிப்பு நேரத்தில் யாரையும் சந்திக்க கூடாது என்ற எண்ணத்திலும் தான் பாலா இப்படி செய்தார் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











