காட்பாடியில் ரஜினி-ஐஸ்வர்யா ராய்!

By Staff

Enthiran
ரஜினியின் எந்திரன் திரைப்படம் இப்போது சென்னை தாண்டி வேலூருக்கு வந்துவிட்டது.

வியாழக்கிழமை, கிறிஸ்துமஸ் தினத்தன்று ரஜினிகாந்த்-ஐஸ்வர்யா ராய் நடிக்கும் எந்திரன் படப்பிடிப்பு வேலூரை அடுத்த காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்தது.

அதிகாலையிலேயே ஷங்கர் தலைமையிலான படக்குழுவினர் நேற்று வேலூரை அடுத்த காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். அங்குள்ள கெஸ்ட்ஹவுசில் தங்கினர்.

காலை 8 மணிக்கெல்லாம் ரஜினி- ஐஸ்வர்யா ராய் இருவரும் தனித்தனி கார்களில் வேலூர் வந்தனர். அவர்கள் வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

நேற்று காலை டெக்னாலஜி டவரில் படிப்பிடிப்பு நடந்தது. இதில், நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோர் கலந்து கொண்டு நடித்தனர். படப்பிடிப்பு நடந்த இடத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பல்கலைக்கழகத்தின் உள்ளே செல்ல பத்திரிகையாளர்கள் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் ஆகியோர் வேலூர் வருகை தந்துள்ளது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X