மதுப்பாட்டில் செட்.. மயக்கும் மேக்னா!

வைத்தீஸ்வரன், வீராசாமி என சில தமிழ்ப் படங்களில் தலைகாட்டியவர் பாலிவுட் கவர்ச்சிப் புயல் மேக்னா நாயுடு. ஆனால் ஏனோ தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.
இனி கதாநாயகி வாய்ப்புக்காக காத்திருந்தால் வயசு கரைவதுதான் மிச்சம் என்பதை உணர்ந்து, குட்டி படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டார்.
அடுத்து புலிவேஷம் படத்தில் ஆடுகிறாராம். இதில் முன்னாள் ரொமான்டிக் ஹீரோ கார்த்தியும் உண்டு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சதா நடிக்கிறார்.
மேக்னாவின் ஆட்டத்துக்காக ஏவிஎம்மில் ஒரு பிரமாண்ட செட் போட்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்க காலி மதுப் புட்டிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த செட், பார்ப்பவர்களை ஒரு கணம் சுண்டி இழுக்கவே செய்கிறது.
இந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ந்து குத்துப் பாடல்களுக்கு முக்கியத்துவம் தரப் போகிறாராம்.
Comments
actor karthik actress meghna naidu actress sadha இயக்குனர் வாசு குத்துப் பாடல் டைரக்டர் ஆர் கே புலி வேஷம் மேக்னா நாயுடு item number dance pulivesham tamil film


Click it and Unblock the Notifications