குசேலன்-ரஜினி அறிமுக பாடல் சூட்டிங்

சிவாஜியைத் தொடர்ந்து வாசுவின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் குசேலன். தற்போது படப்பிடிப்பு ஜரூராக நடந்து வருகிறது. படத்தில் ரஜினி அறிமுகமாகும் பாடலின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது.
வாலி எழுதியுள்ள ''சினிமா... சினிமாதான்...'' என்று தொடங்குகிறது ரஜினியின் அறிமுகப் பாடல். இந்த பாடலில் பறக்கும் குதிரையில் ஒய்யாரமாக திரையில் தோன்றுகிறார் ரஜினி. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் வாசு கூறுகையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பிரத்யேகமாக இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார். ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகமும், திருப்தியும் கிடைக்கும் வகையில் பாடல் இருக்கும். படம் முழுவதும் ரஜினி தோன்றுவார்.
குசேலன் ரஜினி குறித்த சுவையான செய்திகளை விரைவில் வெளியிடுவேன். ரஜினியின் ஹாட்ரிக் படங்களில் குசேலனும் கட்டாயம் இடம் பிடிக்கும். குசேலன் முழுக்க முழுக்க ரஜினி படம். படம் முழுக்க அவர் வருகிறார் என்று அடித்துக் கூறுகிறார் வாசு.
குசேலனின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆலப்புழா உள்பட கேரளாவில் நடக்க உள்ளது.


Click it and Unblock the Notifications











