தென்காசி அருகே பூஜை போடப்பட்ட 'திருமந்திரம்'

தமிழ் திரைப்படங்களின் பூஜைகள் வழக்கமாக சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில்தான் பிரமாண்டமாக நடைபெறும்.
ஆனால் திருமந்திரம் எனும் படத்தின் தொடக்க விழா நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ஆய்க்குடி எனும் கிராமத்தில் செயல்பட்டு வரும் மாற்று திறன் கொண்டோர் நிறுவனத்தில் உள்ள அமர்சேவா சங்க வாளகத்தில் நடைபெற்றது.
கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சரவணன் பொன்னுசாமி தயாரித்து ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் ராதாரவி மகன் ஹரி ராதாரவி வில்லனாக அறி்முகம் ஆகிறார்.
மும்பையை சேர்ந்த ஆர்யா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். பூஜை நிகழ்ச்சியில், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இயக்குனர் ராமநாராயணன், வாகை சந்திரசேகர், இயக்குனர் ஆர்கே செல்வமணி, தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் உள்ளிட்ட பிரமுகர்கள் பேசினர்.
சரத்குமார் கிளப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ராதாரவி, சரவண பொன்னுசாமி, ஹரி ராதாரவி, கதாநாயகி ஆர்யா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
இப்படத்தில் சீதா, வாசுவிக்ரம், ஓ.ஏ.கே சுந்தர், ஓய்ஜி மகேந்திரன், நம்பிராஜ், முத்துகாளை, சினேகா நம்பியார், ஆகியோர் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் 40 நாட்கள் நடக்கிறது. பாடல் காட்சிகள் அமெரிக்கா மற்றும் கம்போடியாவில் படமாக்கப்படுகிறதாம். கவிஞர் பிறை சூடன் எழுதி தேவா இசையில் 5 பாடல்கள் இடம்பெறுகிறது.


Click it and Unblock the Notifications











