ஆஸ்கர்: படப்பிடிப்பில் கொண்டாட்டம்!

பார்த்தி பாஸ்கர் இயக்கத்தில் ஜெய், பூர்ணா நடிக்கும் 'அர்ஜுனன் காதலி' படப்பிடிப்பு கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் தயாரிக்கிறார்.
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அங்கே முகாமிட்டிருக்கும் இப்படக்குழு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்த சந்தோஷத்தை பெரும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது. இது குறித்து படத்தின் இயக்குனர் பார்த்தி பாஸ்கர் கூறியதாவது:
ரஹ்மானுக்கு விருது கிடைத்தது என்ற தகவலை அறிந்தவுடன், டவுனில் இருந்து பத்தாயிரம் வாலா பட்டாசு வாங்கி வந்து வெடி வெடித்து கொண்டாடினோம்.
ஜெய்யும், பூர்ணாவுமே கார் எடுத்துக் கொண்டு ஸ்வீட் கடைக்கு ஓடினார்கள். ஏராளமான ஸ்வீட்களை வாங்கி வந்து கும்பகோணத்தில் நாங்கள் தங்கியிருந்த பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தோம் என்றார்.


Click it and Unblock the Notifications











