பரத்துக்கு முட்டியில் காயம்!

பரத் தம்பிக்கு இந்த ஊரு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சண்டைக் காட்சி ஒன்று சென்னையில் படமாக்கப்பட்டது.
தளபதி திணேஷ் இந்த சண்டைக் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தார். வேகமாக சென்ற இரு ஆட்டோக்களுக்கு மத்தியில் ஆட்டோவுக்கு ஒரு காலாக இரு கால்களையும் வைத்தபடி பரத் செல்வது போல காட்சி.
இரு ஆட்டோக்களும் ஒரே வேகத்தி்ல் போனால்தான் இந்தக் காட்சியைப் படமாக்குவது சாத்தியம். இந்த நிலையி்ல் ஒரு ஆட்டோ மட்டும் சற்று வேகமாக சென்றது. இதனால் நிலை தடுமாறிய பரத் கீழே விழுந்தார்.
இதில் அவரது முட்டியில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Comments


Click it and Unblock the Notifications